அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அறநெறி பாடசாலை ஆசிரியர் பொறுப்பில் பத்து வருடங்களுக்கு மேல் சேவை செய்தவர்களுக்கு இந்த பதவி வழங்கப்படவுள்ளது.
3 ஆயிரத்து 200 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் நியமனத்துக்கான கடிதம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.