வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றைய தினம் (12.12) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பாக யாழ்ப்பாண மீனவர்களின் இன்றைய(12/12) பேரணி மற்றும் கோரிக்கைகளை உரிய தரப்பின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு அரசாங்க அதிபரைக் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.