வடமாகாண கௌரவ ஆளுநரின் முன்னாள் உதவிச் செயலாளர், முன்னாள்பிரதித்திட்டப் பணிப்பாளர் _ திட்டமிடல் செயலகம் வடக்கு மாகாணம், ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு முன்னாள் உதவி அரசாங்க அதிபர்பணியாற்றி மறைந்த ஜோசேப்பு சேவியர் செல்வநாயகம் அவர்களின் உடல் இன்று (ஓகஸ்ட் 05) மாலை நெடுந்தீவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த ஓகஸ்ட் 02 அன்று உடல்நலக் குறைவு காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த ஜோசேப்பு சேவியர் செல்வநாயகம் அவர்களின் உடல் நேற்று (ஓகஸ்ட் 04) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில்அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மதியம் 1. 00 மணிக்கு நெடுந்தீவுக்கு மக்கள் அஞ்சலிக்காக எடுத்துவரப்பட்டது.
இன்று (ஓகஸ்ட் 05) செவ்வாய்க்கிழமை பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இறுதி ஆராதனை இடம்பெற்று தொடர்ந்து அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் மூத்த உறுப்பினரான அன்னாருக்கான இறுதி மரியாதையினை செலுத்தும் வகையில் நிலைய மண்டபத்தில் மதியம் 1.45 மணிக்கு வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மதியம் 2.00 மணிக்கு நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நெடுந்தீவு கிழக்கு கட்டுராமன்சல்லி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.