அமரர். யாதவராயர் சின்னத்தங்கம் நினைவாக நெடுந்தீவில் பனம் வித்து விதைப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மத்தி பெருக்கடியினை பிறப்பிடமாக கொண்ட அமரர் யாதவராயர் சின்னத்தங்கம் அவர்களது நினைவாக இன்றையதினம் (ஒக்.17) நெடுந்தீவின் கரையோர பகுதிகளில் பனம் வித்துக்கள் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

அமரர் யாதவராயர் சின்னத்தங்கம் அவர்களது நினைவாக குடும்பத்தினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட நல்லெண்ண முயற்சியில் நெடுந்தீவு பிரதேச செயலாளர், பிரதேச சபை தலைவர் , மகாவித்தியாலய அதிபர் , வனஜீவராசிகள் தினைக்கள அதிகாரி, நவரட்ணசிங்கம் அறக்கட்டளை ஸ்தாபகர் மற்றும் நலன் விரும்பிகளின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

திருமதி யாதவராயர் சின்னத்தங்கம் அவர்கள் கடந்த செப். 22 -2025 அன்று யாழ்நகரில் இறைபதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article