முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அமரர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சாவகச்சேரியில் இன்று இடம்பெற்றது.
அமரர் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. அவரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கபட்டதோடு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் அமரர் ரவிராஜின் துணைவியார் சசிகலா ரவிராஜ், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், சரவணபவன் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.