அனலைதீவு பிரதேசத்தின் தெற்குக் கடற்கரையைத் துப்பரவாக்கும் நிகழ்வு “அழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலா தளம்“ என்னும்தொனிப்பொருளில் ஐனாதிபதி செயலகத்தினால் மேற்கொள்ளப்படும் தேசியClean Sri Lanka செயற்திட்டத்தின் கீழ் நாளையதினம் (பெப். 23) ஞாயிற்றுக்கிழமை காலை 07.30 தொடக்கம் 11.30 வரை இடம்பெற உள்ளது.
ஊர்காவற்றுறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபைஉத்தியோகத்தர்கள், Green அனலை அமைப்பினர், அனலைதீவு கலாசாரஒன்றியம் மற்றும் அனலைதீவு கிராம மட்ட அமைப்புகள் இணைந்து நடைமுறைப்படுத்தவுள்ளன.
இந்நிகழ்வில். அனலைதீவுல் வசிக்கும் அனைத்து மக்களும் இணைந்து, இச்செயற்பாட்டினை ஆக்கபூர்வமாக நடத்தத் தங்கள் ஒத்துழைப்பினைவழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.