அனலைதீவு கடற்கரையில் மனித எச்சங்கள் கரையொதுங்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதேசவாசிகள் கருத்து தெரிவிக்கையில், மனித எச்சங்கள் கரையொதுங்கிய கடற்கரைக்கு அருகாமையில் மயானம் காணப்பட்டதாகவும் அதிலிருந்து மனித எச்சங்கள் கடல் அரிப்பின் மூலம் வெளிக் கொண்டு வந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
வேறு சிலர் கருத்து தெரிவிக்கையில் கடலில் காணாமல் போனவரின் மனித எச்சங்கள் நீண்ட காலத்திற்குப் பின்னர் கரை ஒதுங்கி இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து போலீசார் சம்பவ இடத்தை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.