அனர்த்தத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்களை பொறுப்பேற்கும் அரசு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த சிறார்களை, சமூக நலன்புரி நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களம் பாதுகாக்கவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் ஷானிக்கா மலல்கொட குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் பணிகளை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Share this Article