அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு- சதொச !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள்குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விலைக் குறைப்பானது இன்று (ஜூலை25) வியாழக்கிழமை முதல்அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ பாசிப்பயறு 965 ரூபாவாகவும், 400 கிராம் பால்மா 910 ரூபாவாகவும், ஒரு கிலோ நெத்தலி 950 ரூபாவாகவும், ஒரு கிலோ இந்திய பெரியவெங்காயம் 285 ரூபாவாகவும், ஒரு கிலோ கடலை 444 ரூபாவாகவும், ஒருகிலோ கோதுமை மா 185 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனி 258 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசி 199 ரூபாவாகவும், ஒரு கிலோபாகிஸ்தான் பெரிய வெங்காயம் 185 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது

Share this Article