மாத்தறை – கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவுந்தர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
காரில் வந்த அடையாளம் தெரியாத இருவர் 9 மி.மீ துப்பாக்கியால் துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
‘டிலைட்’ எனப்படும் 55 வயது மீன் வியாபாரி மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய பொலிஸ் பிரிவு சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.