வைத்தியசாலையினுள் மோட்டார் சைக்களில் நுழைந்து தாக்குதல்: ஒருவர் கைது !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
Screenshot

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளில்நுழைந்தவர் ஒருவர் கேள்வி கேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீதுதாக்குதல் நடத்திய சம்பவமொன்று நேற்றையதினம்( மே27) இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் வைத்தியசாலை உத்தியோகத்தர் படுகாயமடைந்ததுடன் தாக்குதல்நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில்  இரவு 10 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாறு, வந்த நபரொருவர்விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்து சிகிச்சையளிக்ககோரியுள்ளார்.

இதன்போது ஏன் மோட்டார் வண்டியில் உள்ளே வந்தீர்கள் என கேட்டவைத்தியசாலை உத்தியோகத்தர் மீது  மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தநபர், அலுவலக மேசை மீது இருந்த இயந்திரத்தை தூக்கி தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அங்கு ஒன்றுகூடிய வைத்தியசாலை ஊழியர்கள் குறித்த நபரைபிடித்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த சம்பவம் வைத்தியசாலை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது

Share this Article