வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட யாழ்மக்களிற்கு சீன அரசின் உதவி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாண  மாவட்டத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 18 ஆம் திகதிதொடக்கம் 26 ஆம் திகதி வரை ஏற்பட்ட  கனமழை காரணமாக  பாதிக்கப்பட்டமக்களுக்கான

சீன அரசாங்கத்தின்     சீனாவின் சகோதர பாசம்செயற்றிட்டத்தின் கீழ் உலர்உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு யாழ் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்தலைமையில் நேற்றைய தினம் (பெப். 10) மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில்  இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி கெளரவ சூயன்வெய், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்தனர்.

கன மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட   15 பிரதேச செயலகபிரிவுகளுக்குட்பட்ட  1070 குடும்பங்களிற்கு தலா ரூபா 6500.00 பெறுமதியானஏறத்தாள 6.90 மில்லியன் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை  சீனாஅரசாங்கம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Share this Article