வடமராட்சி , பருத்தித்துறை பகுதியில் வெள்ளத்தால் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் , சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
பருத்தித்துறை ஓடக்கரை ஜே/402 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் 100 குடும்பங்கள் மழையினால் வெள்ள பாதிப்பை எதிர்கொண்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாக பாதிப்படைந்த நிலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறி , உறவினர் வீடுகள், பொதுமண்டபங்கள் , பொது இடங்களில் தங்கியுள்ளனர்.
அதேவேளை அப்பகுதியில் பாதிப்படைந்த மக்களுக்கு எமது பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பரமேஸ்வரன் சுரேஷ் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக முதல் கட்டமாக இன்றைய தினம் வியாழக்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் , யாழ்.மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் , மற்றும் அக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் உள்ளிட்ட குழுவினர் சமைத்த உணவுகளை மணிவண்ணன் அவர்களின் நண்பர்களின் உதவியில் வழங்கினர்.