வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் மீட்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று, ஏகல பிரதேச வீதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஜா-எல பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏகல விகாரை வீதியிலேயே இது மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அது பொலித்தீன் பையொன்றில் சுற்றப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த ரிவால்வர் இயங்கும் நிலையில் உள்ளதாகவும், ஏதேனும் குற்றச் செயலுக்காகப் பயன்படுத்துவதற்கு மற்றொரு நபர் எடுத்துச் செல்வதற்காகவே இவ்விடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட ரிவால்வரின் உரிமையாளர் யார் என்பது குறித்தும், அதனைக் கொண்டு மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட குற்றம் என்ன என்பது குறித்தும் ஜா-எல பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது

Share this Article