கௌரவ ஜனாதிபதி அவர்களின் சுபிட்சத்தின் நோக்கு திட்டத்தை மையப்படுத்தியதான அபிவிருத்தி திட்டத்தின் ஒரு அங்கமான ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக நெடுந்தீவிலும் 2 கிலோ மீற்றர் வீதித்த்திருத்தத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இடம் பெற்றது.
இச் செயற்பாட்டின் கீழ் தூங்காலையில் இருந்து சீக்கிரியாம் பள்ளம் பின்பகுதி வரை காணப்படுகின்ற சின்னப்பால முனை வீதியினை திருத்தம் செய்து கொள்வதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
அனைத்து இடங்களிலும் காப்பெற் வீதியாக மாற்றம் செய்கின்றபோதும் நெடுந்தீவில் காப்பெற்வீதியாக புணரமைப்பு செய்வது கடினமானதாக கருதி கொங்கிறீற் வீதியாக புணரமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு செயற்றிட்டத்திற்கான அறிவித்தல் பலகையும் திறந்து வைக்கப்பட்டது.
2கிலோமீறர் தூரமான வீதி 04 மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுளு;ளது. இவ் அறிவித்தல் பலகையினை நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளர் திரு.நல்லதம்பி சசிகுமார் அவர்கள் திறந்து வைத்தார் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதேச செயலாளர் அவர்கள், பிரதேச சபை தலைவர், வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நெடுந்தீவில் வீதி அபிவிருத்தி சபைக்கு சொந்தமான வீதிகள் எதுவம் காணப்படாத போதும் விஷேட விதமாக இவ்வீதியினை வீதி அபிவிருத்தி சபை பொறுப்பேற்று மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.