ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) இரண்டு பௌத்த பிக்குகளை பொதுத்தேர்தலுக்கு களமிறக்கியுள்ளது.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த வண. கிரிப்பன்னாரே விஜித தேரர் மற்றும் வண. உடவளவே ஜினசிறி தேரர் ஈ.பி.டி.பி.யின் வீணை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிரிப்பன்னாரே விஜித தேரர், தேசிய நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி.யில் இருந்து போட்டியிட முடிவு செய்ததாக கூறினார்.
அவருடைய கருத்தில், பதவிகளை நோக்கி போகாமல், தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதையே எங்கள் முக்கிய இலக்காகக் கொண்டுள்ளோம். நாங்கள் ஒரே இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப விரும்புகிறோம் என்றார்.