வீடு உடைத்துத் திருட முயன்றார் என்று கூறப்படும் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் சாவகச்சேரி வடக்கு, மண்டுவிலில் இன்று காலை (டிசம்பர் 28) நடந்துள்ளது.
வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்றிருந்த சமயம் வீட்டில் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார். அதை அறியாத திருடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்றுள்ளார்.
வீட்டுக்குள் இருந்தவர் சத்தம் கேட்டு சுதாகரித்துக் கொண்டு, அயலவர்களுக்கு அறிவித்ததை அடுத்து, திருடன் மடக்கிப் பிடிக்கப்பட்டான் என்று தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டவர், நன்றாகக் கவனிக்கப்பட்ட பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.