விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களின் உடற்தகுதிபரிசோதனை செய்வதற்கு விளையாட்டு விஞ்ஞானத்துறை சார்ந்தவைத்தியர்களை மாவட்ட பொது வைத்தியசாலைகளுக்கு நியமிக்க நடவடிக்கைஎடுக்கவேண்டுமென இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றஉறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் 07 அன்று பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் நடைபெற்றவிளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின்ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறுகோரிக்கை முன்வைத்தார்.
விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் சுனில்குமார கமகேதலைமையில் நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதேஇந்தக்கோரிக்கையை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர்களுக்குஉடற்தகுதி மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும் மாவட்டவைத்தியசாலைகளில் இதற்கான விசேட மருத்துவர்கள் இல்லை. எனவேவிளையாட்டு விஞ்ஞானத்துறை சார்ந்த வைத்திய நிபுணர்களை அல்லது அதுதொடர்பான பயிற்றப்பட்ட வைத்தியர்களை நியமிக்க நடவடிக்கைஎடுக்கவேண்டும். மாவட்ட வைத்தியசாலைகளில் இவ்வாறான பயிற்றப்பட்டவைத்தியர்கள் பற்றாக்குறை காணப்படுவதால் விளையாட்டுப்போட்டிகளில்பங்கேற்கும் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பாரியசவால்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்தார்.