வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில் வியட்நாமுக்குஉத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை (மே 03) நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்றுஞாயிற்றுக்கிழமை (மே 04) முற்பகல் வியட்நாமின் நோய் பாய் சர்வதேச விமானநிலையத்தை சென்றடைந்தார்.
அங்கு, ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின்மத்தியக் குழு உறுப்பினரும் வெளிவிவகார பிரதி அமைச்சருமான நுயென் மான்குவோங் உள்ளிட்ட அரச பிரதிநிதிகளால் அமோகமாக வரவேற்கப்பட்டனர்.
இந்த வரவேற்பு நிகழ்வில் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டேம்வியட்நாமுக்கான இலங்கைத் தூதுவர் போசித பெரேரா மற்றும் இலங்கைத்தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவும் கலந்துகொண்டனர்.