விபத்துகள் தொடர்பான அதிர்ச்சித் தகவலை யாழ் போதனா வைத்தியசாலை வெளியிட்டது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழில் இடம்பெறும் வீதி விபத்துக்களின் காரணமாக அவசரச் சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வைத்திய நிபுணர் கந்தையா மணிதீபன் தெரிவித்தார். அவர் நேற்று முன்தினம் (ஜூலை 11) யாழ். போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை கூறினார்.

மேலும், “யாழில் அண்மைக்காலமாக வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. குறிப்பாக 16 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் இவ்வாறு வீதி விபத்துக்களால் மிகுதியாக பாதிக்கப்படுகின்றனர்” என்று தெரிவித்தார்.

Share this Article