வாக்காளர் எண்ணிக்கை 2 இலட்சத்தினால் அதிகரிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது வாக்காளர் எண்ணிக்கைஇரண்டு இலட்சத்தினால் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின்அடிப்படையில் நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தைஅடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி இறுதி பட்டியல் கையொப்பமிடப்பட்டுவெளியிடப்பட உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கையுடன் ஒப்பீடு செய்யும் போதுஇந்த ஆண்டில் இரண்டு இலட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அடுத்த மாதம் 17ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில்தீர்மானிப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உண்டு எனதெரிவிக்கப்படுகின்றது. அதன்படி ஜுலை மாத இறுதியில் ஜனாதிபதி தேர்தல் குறித்த வர்த்தமானிஅறிவித்தல் அநேகமாக வெளியிடப்படும் என தெற்கு ஊடகங்கள்தெரிவிக்கின்றன.

Share this Article