வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக பல மோசடிகள் இடம்பெறுவதாகவும்அதற்கு பொலிஸாரும் உடந்தை என தெரிவித்து நேற்றைய தினம் ஊடகங்களில்செய்திகள் வெளியாகியிருந்தன
இதனை தொடர்ந்து வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் வவுனியாதலமை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கமைவாக செயல்பட்டதலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிசிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்கள் தன் தலைமையிலானகுழுவினருடன் இன்று அதிகாலை வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாகமோசடிகளில் ஈடுபட்டுவருபவர்கள் என அடையாளம் கண்டுகொண்ட ஆறு பேரைசந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து விசாரனைகளை மேக்கொண்டபின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார்தெரிவிக்கின்றனர்
இதேவேளை வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின்பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலி்ஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்கள்எதிர்வரும் நாட்களில் கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ஏதேனும் மோசடிகள்இடம்பெறுமாயின் தனது உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கமான
0718593520 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும்பொதுமக்களுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளார்
பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பலரும் பராட்டுக்களைதெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது