வவுனியா பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஊடகக் கற்கை நெறியில் இணையுமாறு மாணவர்களுக்கு துணைவேந்தர் ரி. மங்களேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் மொழி மூலம் வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஊடக மற்றும் இதழியல் கற்கை நெறிகளுக்கான உயர்தர சான்றிதழ்கள் வழங்கும் நோக்கத்துடன் இந்த பாடத்திட்டத்தை தயாரித்து ஊடகப் பேரவையின் அனுமதியுடன் முதன்முதலாக 28-5-2023 அன்று வவுனியா பல்கலைக்கழகத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த ஊடகக் கல்வியில் தற்போது ஊடகவியலாளர்களாக இருப்பவர்கள், எதிர்காலத்தில் ஊடகத்துறையில் இணைய விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம் என்று வவுனியா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த கற்கை நெறியின் இணைப்பாளராக திருமதி மதிவதனி அவர்கள் செயற்படுகின்றார். இதில் ஊடகத்துறையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும் புதிதாக இணைந்து கொள்பவர்களுக்கும் எதிர்கால ஊடகத்துறையில் பணியாற்ற அல்லது ஆர்வமுடையவர்ளுக்கு இது ஒரு சிறந்த கற்கை நெறியாக இருக்கும்.
மேலும் இந்த ஊடகக் கற்கையானது தமிழ் மொழியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வடபகுதியில் உள்ளவர்கள் ஊடகத்துறையை சரியாக கற்று ஊடகத்துறை ஊடாக சரியான தகவல்கள், செய்திகள், ஊடாக மக்களுக்களின் பிரச்சினைகளை உரிய முறையில் வெளிக்கொண்டு வருவதற்கு இந்த கற்கை நெறியானது சிறந்த பங்களிப்பைச் செய்யும்.
அத்துடன் ஊடகத்துறையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் இந்த ஊடக கல்வியின் வளவாளர்களாக காணப்படுகிறார்கள்.
இந்த ஊடக கற்கையில் தற்போது வவுனியா, கிளிநொச்சி, திருகோணமலை, யாழ்ப்பாணம், மலையகம்,போன்ற இடங்களில் இருந்து வருகை தந்து மாணவர்கள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த கற்கை நெறிக்காண கட்டணம் ரூபாய் 10000 (பத்தாயிரம்) என்பதுடன் ஆறு மாதங்கள் நடைபெற உள்ள இந்த பாடத் திட்டமானது ஒவ்வொரு சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையில் வவுனியா பல்கலைக்கழகத்தின் பூங்கா வீதியில் உள்ள கட்டடத்தில் நடைபெறும்.
இந்த ஊடகக் கற்கையில் இணைய விருப்பம் உள்ளவர்கள் எட்டாம் வகுப்பு நிறைவு செய்திருந்தால் போதுமானது ஊடகத்துறையில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களும் துறையில் ஆர்வம் உடையவர்களும் இந்த பாடநெறியில் இணைந்து எதிர்காலத்தில் ஊடகத்துறையை தொழில் ரீதியாக ஈடுபட நினைப்பவர்களுக்கு இந்த கற்கைநெறி மிகவும் நன்மை உடையதாக இருக்கும்.
மேலும் இந்த பாடநெறியை நிறைவு செய்பவர்களுக்கு உயர்தர கற்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதுடன் எதிர்காலத்தில் இதை டிப்ளமோ கற்கை நெறியாக தரம் உயர்த்துவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஏனைய மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் இங்கு படித்தாலும் மன்னார் மாவட்டத்திலிருந்து மாணவர்கள் எவரும் இந்த பாடநெறியில் பங்கு கொள்ளவில்லை.
ஏற்கனவே இவை ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் தற்பொழுது இணைபவர்களுக்கான அனுமதியை நாங்கள் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என்று வவுனியா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.