வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் விடுதி ஒன்றில் வெள்ளிக்கிழமை (ஜூலை19) பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது விபச்சாரத்தில்ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா, தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில்பொலிசார் இரவு விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சோதனை செய்த போதுவிபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் காலி ஆகிய இடங்களைச்சேர்ந்தவர்களாவர். மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில்முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.