வரலாற்றுச்சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் வைகாசி விசாக பொங்கலின் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு நேற்று (மே 29) சிறப்பாக நடைபெற்றது.
காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமான தீர்த்தக்குடம் தாங்கிய குழுவின் நடை பவனி, பெருந்தெரு வீதி வழியாக அம்மன் சந்தியை அடைந்து புதறிகுடா ஊடாக ஊற்றங்கரையை அடைந்து, பின் முல்லைத்தீவு பிரதான வீதியூடாக சிலாவத்தை சந்தியை அடைந்து சிலாவத்தை தீர்த்தக்கரை புனித பிரதேசத்தில் தீர்த்தமெடுத்தல் நடைபெற்றது.
நந்திக்கடல் அருகினிலே எழிலுடனே வீற்றிருந்து நாடி வரும் அடியவர்க்கு நலம் பல அருளும் வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வருடாந்த வைகாசி விசாக பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு கடலில் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு பக்தி பூர்வமாக இடம்பெறவுள்ளது.
கடலில் இருந்து எடுக்கப்பட்ட உப்புநீரில் இன்று(மே 30) விளக்கேற்றப்படும். ஏற்றப்படும் விளக்கு ஒரு வாரத்திற்கு தொடர்ந்து எரியும்.