200 மில்லியன் அரச நிதி மோசடி வழக்கில் இருந்து ராடா எனும் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ் உள்ளிட்ட நால்வரை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது.
டிரான் அலஸ், புலிகளின் வட, கிழக்கு மாகாண நிதி தலைவர் என்று கூறப்படும் எமில் கந்தன், ராடா நிறுவன முன்னாள் நிறைவேற்று அதிகாரி சாலிய விக்ரமசூரிய மற்றும் ஜயந்த டயஸ சமரசிங்க ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்னர்.
2006ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக வட மாகாணத்தில் வீடுகள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்காக வீடமைப்புத் திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்ட போது 200 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு இந்த வழக்கு தொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.