வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது பதுளையை பிறப்பிடமாகவும், பாரதிவீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டைபொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ்உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 29 அன்று திடீர் இரத்த வாந்தி ஏற்பட்டமையால் மூளாய்கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் மேலதிகசிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்சேர்ப்பிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (ஆகஸ்ட்30) அதிகாலைஉயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணை மற்றும் உடற்கூற்றுபரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share this Article