வடமராட்சி கிழக்கு – உடுத்துறை கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய படகு!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வடமராட்சி கிழக்கு,உடுத்துறை ஐந்தாம் பனையடி கடற்கரை பகுதியில் படகுஒன்று நேற்று(டிசம்பர்23) காலை கரையொதுங்கியுள்ளது.

OFRP-6224JFN என்னும் இலக்கமுடைய குறித்த படகு ஆட்கள் யாருமற்றுகரையொதுங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

படகு தொடர்பில் அதிகரிகளுக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவஇடத்திற்கு வருகை தந்த வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்க சமாசதலைவர் மற்றும் பொலிசார் படகை பார்வையிட்டதுடன் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

இயந்திரமற்று ஆழ்கடலில் இருந்து கரையொதுங்கிய இலங்கை படகைகடத்தல்காரர்கள் கையாண்டிருக்கலாமென பொலிசார் சந்தேகம்வெளயிட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிகவிசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்

Share this Article