வடக்கு மாகாணத்தில் பல்லாயிரக்கணக்கான உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் இடமாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவ்விடமாற்றங்கள் எதிர்வரும் வியாழக்கிழமை நாளை (ஜலை 17) முதல் நடைமுறையில் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இடமாற்றப்பட்டுள்ளவர்களில்,
-
வடமாகாண ஆளுநரின் செயலராக இருந்த மு. நந்தகோபாலன், மகளிர் விவகார, கூட்டுறவு மற்றும் மறுவாழ்வு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
பருத்தித்துறைப் பிரதேச செயலராக இருந்த சி. சத்தியசீலன், தற்போது வடமாகாண ஆளுநரின் செயலாளராக பொறுப்பேற்கின்றார்.
-
கோப்பாய் பிரதேச செயலராக இருந்த சிவஸ்ரீ, இப்போது விவசாய அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
விவசாய அமைச்சின் செயலாளராக இருந்த ஆழ்வார்ப் பிள்ளைஸ்ரீ, பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
-
காணி ஆணையாளராக இருந்த அ. சோதிநாதன், தற்போது உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாற்றங்கள் நிர்வாகச் செயல்பாடுகளை மேலும் சக்திவாய்ந்ததாக மாற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.