வடக்கு பனை உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய திட்டம் – தலைவர் சகாதேவன்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வட மாகாணத்தில் இருந்து சுமார் 3500 மில்லியன் ரூபா பெறுமதியான பனைசார் உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவதற்கானதிட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர்சகாதேவன் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து 3500 மில்லியன் ரூபா வருமானத்தைஎதிர்பார்த்து பனை சார் உற்பத்தி பொருட்களை வெளிநாடுகளுக்குஅனுப்புவதற்காகன ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் சுமார்3000 மில்லியன் ரூபாய்க்கான கோரிக்கைக் கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஐரோப்பா அமெரிக்கா கனடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பனை இயற்கைபானத்திற்கான  சிறந்த சந்தை வாய்ப்புகள் கிடைக்கும் நிலையில் ஏற்றுமதிமூலம் அதிக இலாபத்தை ஈட்ட முடியும் என தெரிவித்துள்ளதுடன், பனை வளம்சார் உற்பத்திகளுடன் 95 ஆயிரம் பேர் ஈடுபட்ட நிலையில் அவர்களின்தேவைப்பாடுகள் குறைபாடுகளை நிவர்த்தி செய்யாத காரணத்தினால் குறித்தஉற்பத்தியை துறை  தற்போது 5 ஆயிரம் பேர் வரை சுருக்கப்பட்டுள்ளது.

ஆகவே எதிர்வரும் வருடம் 2025 ஆம் ஆண்டு பனை சார் உற்பத்தி பொருட்கள்மூலம் இலங்கை மொத்த தேசிய வருமானத்துக்கு பங்களிப்பு செய்யும் வகையில்எமது திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article