வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்பட்டல் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்பப் பதிவு புத்தகம் பயன்படுத்தல் என்ற முடிவுக்கு எதிராக நாளையதினம் (நவம்பர்12) 24 மணிநேர குறியீட்டு வேலைநிறுத்தம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த அநீதி மிக்க முடிவு தாதியர் சேவையின் கௌரவத்திற்கும் தனித்தன்மைக்கும் பங்கம் விளைவிப்பதால் வேலைநிறுத்தம் நாளை காலை 7.00 மணிக்கு தொடங்கி, நவம்பர் 13 காலை 7.00 மணிக்கு முடிவடையவுள்ளதாக அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.