வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெள்ளிக்கிழமை ஹர்தால் – எம்.ஏ.சுமந்திரன்

SUB EDITOR
SUB EDITOR
3 Min Read

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் தொடர்ச்சியாககுடிக்கொண்டுள்ளமை அதனால் ஏற்படும் பாதிப்பை மிக வன்மையாககண்டிக்கிறோம். இராணுவ பிரசன்னத்துக்கு பாரியதொரு எதிர்ப்பைவெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(ஓகஸ்ட் 15) வடக்குமற்றும் கிழக்கு மாகாணங்கள் ஹர்த்தாலினால் முழுமையாக முடங்க வேண்டும். எமது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அநீதிகளை கருத்திற் கொண்டுவர்த்தகர்கள் அன்றைய தினம் கடையடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதிசட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

முத்தையன்கட்டு இளைஞன் கொலை வன்மையாக கண்டித்தக்கது. பொலிஸார்எவ்வித தலையீடுகளுமின்றி முறையான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும். இராணுவத்தினர் தமிழ் மக்களுக்கு எதிராகசெயற்படுகிறார்கள்.செம்மணி இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு எனவும்குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் (ஓகஸ்ட் 10) ஊடக சந்திப்பொன்றை நடத்திமேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் சனிக்கிழமை (ஓகஸ்ட்09) அதிகாலைஇளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.2025.08.08 ஆம் திகதியன்றுநான்கு அல்லது ஐந்து பேர் முல்லைத்தீவு இராணுவ முகாமுக்குஇராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.நால்வர் முகாமில் இருந்துதப்பித்துச் சென்றுள்ளார்கள்.ஒருவர் காணாமல் போனதாகவும் குறிப்பிடப்பட்டு, காணாமல் போனவரின் உடல் தான் குளத்தில் இருந்து பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

முகாமுக்குள் வைத்து இராணுவத்தினர் தம்மை மிக மோசமாக தாக்கியதாகதப்பித்து வந்தவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இராணுவத்தினரால் தாக்கப்பட்டுஅடித்துக் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் குளத்தில் வீசப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் உடன் விசாரணை செய்யப்பட வேண்டும். பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம். இவ்வாறான நிலையில் நேற்றுமுன்தினம் மாலை முல்லைத்தீவு பொலிஸாரினால் ஒருசில இராணுவத்தினர்கைது செய்யப்பட்டுள்ளார்கள்.அதில் மூவர் தொடர்ந்து விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித தலையீடுகளுமின்றி முறையானவிசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். பிரதான விடயம் யாதெனில் ஒருசம்பவம் இடம்பெற்றதன் பின்னர் அது தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்லுவது பிரயோசனமற்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் அப்பிரதேசமக்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள்.மக்கள் மீது வன்முறைகளைகட்டவிழ்த்து விடுகிறார்கள்.இதற்கு செம்மணி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

சித்துப்பாத்தி செம்மணி பகுதியில் குறுகிய காலத்துக்குள் 147 இற்கும்அதிகமான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.பல வருடங்களுக்குமுன்னர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்கள் என்பது தற்போதுதெரியவருகிறது.

இவ்வாறான பின்னணியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்இராணுவத்தினர் தொடர்ச்சியாக குடிக்கொண்டுள்ளதாகலும் அதனால் ஏற்படும்பாதிப்பை மிக வன்மையாக கண்டிக்கிறோம்.அதேவேளை இராணுவபிரசன்னத்துக்கு பாரியதொரு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை(ஓகஸ்ட் 15) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் முழுமையான ஹர்த்தாலில்ஈடுபடுமாறு சகல தரப்பினரிடமும் கோருகிறோம்.எமது மக்களுக்கு ஏற்படும்பாதிப்புக்கள் மற்றும் அநீதிகளை கருத்திற் கொண்டு வர்த்தகர்கள் அன்றையதினம் கடையடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றுவலியுறுத்துகிறோம்.

சகல நடவடிக்கைகளையும் கைவிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு மற்றும்கிழக்கு மாகாணங்கள் முழுமையாக முடங்க வேண்டும்.இதற்கு அனைவரதுஒத்துழைப்பையும் கோருகிறோம்.ஏனைய அரசியல் கட்சிகள், சிவில் சமூகஅமைப்புக்கள்,மக்கள் அமைப்புக்கள்,வர்த்தகர்கள், ஒன்றிணைய வேண்டும்என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன் என்றார்.

Share this Article