வடக்குக்கான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வடக்கிற்கான தொடருந்து சேவைகள் எதிர்வரும் ஏப்ரல் 09 முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண தொடருந்து நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மஹவ முதல் ஓமந்தை வரையிலான தொடருந்து பாதையில் ஐந்து தொடருந்து பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் கடந்த ஜனவரி  26 முதல் வடக்குக்கான தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தமிழ் – சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு, எதிர்வரும் 09ஆம் திகதி முதல் தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

தொடருந்து சேவைக்கான முற்பதிவுகள் இன்று (04/04) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், பயணிகள் தமக்கான முற்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சுமார் இரண்டரை மாதங்களுக்கு பின்னர் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமையால், தொடருந்து கடவைகளை கடப்பவர்கள் பாதுகாப்பாக கடக்குமாறும், தொடருந்து பாதைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Share this Article