வடக்குமாகாணத்தில் மார்ச் மாதம் முதல் இன்றுவரையான காலப்பகுதியில் 84 நோயாளர்கள் கொவிட் – 19 தொற்று நோய்க்கு உள்ளாகி உள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதில் மார்ச் மாதம் முதல் செப்ரெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 17 நோயாளர்களும் ஒக்டோபர் மாதம் 39 நோயாளர்களும் நவம்பர் மாதம் 27 நோயாளர்களும் டிசம்பர் மாதம் இன்றுவரை ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.