லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு – கல்முனை(வடக்கு) ஆதார வைத்தியசாலையில் 150 கர்ப்பிணித் தாய்மார்களுக்குபோஷாக்கு பொதி விநியோக நிகழ்ச்சி ஜூன் 27 வியாழன் அன்று இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சித்திட்டத்தில் கர்ப்ப காலத்தில் அவர்களின் ஆரோக்கியம் மற்றும்நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கர்ப்பிணித்தாய்மார்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து பொதிகள் வழங்கப்பட்டன.
இவ்வாறான செயற்பாடுகள் தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தைமேம்படுத்துவதில் அறக்கட்டளையின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன. அத்துடன் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வு தாய்மார்களின்ஆரோக்கியத்துடன் தொடங்குகிறது என்பதை தெளிவுபடுத்துகின்றன.