லிட்ரோ சமையல் எரிவாயுவின் எதிர்வரும் விலைத் திருத்தத்தின் போது 12.5 கிலோ கிராம் உள்நாட்டு சிலிண்டரின் விலை 200 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் எரிவாயு விலையை அதிகரிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
“லிட்ரோ எரிவாயு பாவனையாளர்கள் பாதிக்கப்படும் வகையில் தற்போது எரிவாயு விலையை உயர்த்த பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
விலை சூத்திரத்தின்படி, அடுத்த எரிவாயு விலை திருத்தம் நவம்பர் 5 நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
லிட்ரோ நிறுவனம் இம்மாதம் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 343 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த அதிகரிப்புடன் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 3,470 ரூபாவாக அதிகரித்துள்ளது.