“லண்டனில் இருந்து விமல்” எனும் நூல் அறிமுக விழா யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இன்று(மே 21) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றது.
பிரபல ஒலிபரப்பாளரும் ஊடகவியலாளருமான விமல் சொக்கநாதனால் எழுதப்பெற்ற குறித்த நூல் அறிமுக உரையை கவிஞர் சோ.பத்மநாதனும் நூல் பற்றிய கருத்துரையை எழுத்தாளர் கோகிலா மகேந்திரனும், யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.இ.இராஜேஸ்கண்ணன், யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கந்தையா சிறி கணேசன், சிறப்புரையை உலக அறிவிப்பாளர் அப்துல் ஹமீட்டும், நூலாசிரியரின் விமலின் பன்முகத்தன்மை எனும் தலைப்பில் முன்னாள் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் மூத்த ஊடகவியலாளருமான பரமேஷ்வரன் சிவராமகிருஷ்ணனும், ஆக்கியோன் அறிமுகத்தினை ஓய்வு நிலை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதி கருணா சிவாஜி,என் எண்ணத்திரையில் விமல் எனும் தலைப்பில் டான் தொலைகாட்சியின் தலைவரும், பாரிஸ் தமிழ் ஒளி தொலைக்காட்சியின் முன்னாள் தலைவருமான எஸ்.குகநாதன் ஆற்றியிருந்தார்.
தொடர்ச்சியாக செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் நூலினை வெளியிட்டு வைக்க சுபாஷ் தனியார் விருந்தினர் விடுதியின் உரிமையாளர் முதற்பிரதியை பெற்றுக் கொண்டார் .