யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக்ரொக் பிரபலங்களில் ஒருவரான தனது காதலனுக்குமோட்டார் சைக்கிள் வாங்க நகைகளை களவாடிய யுவதி உள்ளிட்ட ஏழு பேரைசாவகச்சேரி பொலிஸார் நேற்று (ஜூலை28) திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ரிக்ரொக் சமூக வலைத்தளங்களில்தனது காணொளிகளை பதிவேற்றி பிரபலமானவராக தன்னை காட்டிக்கொண்டுவந்துள்ளார்.
குறித்த இளைஞனுடன் ரிக்ரொக் மூலம் அறிமுகமான சாவகச்சேரி பகுதியைசேர்ந்த 19 வயதான யுவதி அவரை காதலித்து வந்துள்ளார்.
வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனமை தொடர்பில், வீட்டுஉரிமையாளர்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், யுவதிமீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, வீட்டில்இருந்த நகைகளை தான் களவெடுத்து காதலனுக்கு வழங்கியதைஒப்புக்கொண்டுள்ளார்.
யுவதியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில், காதலனை கைது செய்தபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் வீட்டில் நகைகளை களவெடுத்த யுவதி , அவரது காதலன், யுவதி வீட்டில் நகைகளை களவெடுப்பதற்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின்நண்பி, நகைகளை விற்க உதவியவர்கள், நகைகளை வாங்கியவர்கள் என ஏழுபேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஏழு நபர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துவிசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.