ரம்புட்டான், மங்குஸ்தான் தோல்கள் டெங்கு நுளம்பு இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தற்போதைய பருவகாலத்தில் அதிகமாக கிடைக்கும் ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் போன்ற பழங்களின் தோல்கள், டெங்கு வைரஸ் பரவல் காரணமான நுளம்புகளின் இனப்பெருக்கத்திற்கு உகந்த சூழலை உருவாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

பழங்களின் தோல்கள் வீதியோரம் மற்றும் வீடுகளில் பல இடங்களில் தூக்கி வீசப்படுவதால், அவை தண்ணீர் தேங்கும் இடங்களை உருவாக்கி, டெங்கு நுளம்புகள் வளர்வதற்கான சூழலை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்த தோல்களை சரியான முறையில் அகற்றுவதில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும், குறைந்தளவிலான நீர் தேங்கும் இடங்களிலும் நுளம்புகள் பெருகக்கூடியதால், இவை டெங்கு பரவலை அதிகரிக்கச் செய்யும் அபாயம் உள்ளதாகவும் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Share this Article