Wednesday, December 7, 2022

யாழ். வைத்தியசாலைகளில் இரத்தத்துக்குத் தட்டுப்பாடு!

Must Read

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் யாழ். குடாநாட்டு வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் இரத்த வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி   வைத்தியர் மகேசு பிரதீபன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

சுகாதாரச் சிக்கல்கள் காரணமாக ஏற்கனவே ஒழுங்கமைக்கப்பட்ட நடமாடும் இரத்ததான முகாம்கள் பிற்போடப்பட்டமையே இரத்தத்தட்டுப்பாட்டுக்கான காரணம். இதனைக்கருத்திற்கொண்டு தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலை, யாழ்ப்பாணம்போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளுக்கு குருதிக் கொடையாளர்கள் நேரடியாக வருகை தந்து இரத்ததானம் வழங்க முடியும்.

அந்தவகையில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தற்போது நடை முறையிலுள்ளகொரோனாகால சுகாதார நடைமுறைகளுக்க மையகுருதிக்கொடையாளர்கள் இரத்ததானம் வழங்க முடியும்.

தற்போதைய நிலைமை யைக் கருத்திற்கொண்டு இரத்த தான முகாம்களின் ஒழுங்க மைப்பாளர்கள் குருதிக்கொடையாளர்களை ஊக்குவிக்க முன்வர வேண்டும். மேலதிகவிவரங்களிற்கு 0772988917 எனும் தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொள்ள முடியும்.- என்றார்.

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img