யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன்தொடர்புடைய நபரொருவர் இன்று (செப். 23) கட்டுநாயக்க விமான நிலையத்தில்வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற போதே போலிஸாரால்கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்குவில் பகுதியில் தலைமறைவாகியிருந்த இந்த நபரை நீண்டகாலமாகபொலிஸார் வலை வீசி தேடிவந்தமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவரிடம் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.