யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு டக்ளஸ் திடீர் விஜயம்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதியில் உரிய அனுமதியின்றிநிர்மானிக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களால் பயணிகளுக்கு ஏற்படும்அசௌகரியங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

அனுமதியின்றி நிர்மானிக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள்தொடர்பில் பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை தொடர்ந்துநேற்று (மே31) மாலை அமைச்சர் நிலைமைகளை நேரில் சென்றுபார்வையிட்டுள்ளார்.

இந்த நிலையில், அங்கு காணப்படும் அசுத்தமான சூழலை மாற்றியமைக்கநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சம்மந்தப்பட்ட தரப்பினருக்குஅமைச்சர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அத்துடன், இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய பணிப்பாளருடனும்தொடர்பு கொண்டு நிலைமைகள் தொடர்பாக பிரஸ்தாபித்துள்ளார். 

Share this Article