யாழ் பொன்னாலையில் சிக்கிய கசிப்பு கோட்டை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு, நெல்லியான்பகுதியில் உள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்று நேற்று (நவம்பர் 16) காலை வட்டுக்கோட்டை பொலிஸாரால் சுற்றிவளைப்பு செய்யப்பட்டது.

இதன்போது 166 லீட்டர்கள் கோடா, 10.5 லீட்டர் கசிப்பு என்பவற்றுடன் கசிப்புஉற்பத்திக்கு பயன்படுத்திய இரண்டு பெரிய கொள்கலன்கள், இரண்டு சிறியகொள்கலன்கள், இரண்டு செப்பு சுருள் என்பவற்றுடன் 20 வயதுடையசந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சி.ஐ.கொஸ்தாதலைமையின் கீழ் இயங்கும் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு, போதைப்பொருள்தடுப்பு பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய பொலிஸ் குழுவினரால் இந்த கைதுநடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரைமல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article