By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: யாழ் பல்கலையில் மூவருக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு!
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
நெடுந்தீவு
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
இலங்கைச் செய்தி
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
இலங்கைச் செய்தி
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!
யாழ்ப்பாணம்
யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > யாழ் பல்கலையில் மூவருக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு!
யாழ்ப்பாணம்

யாழ் பல்கலையில் மூவருக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு!

Last updated: 2023/05/21 at 7:26 AM
Published May 21, 2023 231 Views
Share
1 Min Read
SHARE

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகவும், ஒருவர் இணைப் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பேராசிரியர் ஒருவர் துறைக்குரிய இருக்கைப் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

முகாமைத்துவ கற்கைகள், வணிக பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவருமாக இரண்டு சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகவும், விவசாய பீடத்தைச் சேர்ந்த ஒருவரை இணைப் பேராசிரியராகவும் பதaவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியதுடன், முகாமைத்துவ கற்கைகள், வணிக பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரைத் துறைக்கான இருக்கைப் பேராசிரியராக நியமிப்பதற்கும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று (மே 20) காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு, நேர்முகத் தேர்வு முடிவுகள் இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அவற்றின் படி, முகாமைத்துவ கற்கைகள், வணிக பீடத்தின் மனித வள முகாமைத்துவத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர், கலாநிதி (திருமதி) எஸ். எம். சி. மகேந்திரன் அலோசியஸ்  மனித வள முகாமைத்துவத்தில் பேராசிரியராகவும், விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறைத் தலைவரும்,  சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி பூ. ஐங்கரன் Configuration பேராசிரியராகவும்,  விவசாய பீடத்தின் விவசாயப் பொருளியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே. சூரியகுமார் விவசாயப் பொருளியலில் இணைப் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இதேநேரம், முகாமைத்துவ கற்கைகள், வணிக பீடத்தில் மனித வள முகாமைத்துவத் துறையில் பேராசிரியரும்  (Professor in Human Resource Management) , மனித வள முகாமைத்துவத் துறைத் தலைவருமான பேராசிரியர் என் கெங்காதரன் மனித வள முகாமைத்துவத் துறைப் பேராசிரியராகப்  (Professor of Human Resource Management)  (துறைக்கான இருக்கைப் பேராசிரியர் – Cadre Chair professor ) பதவி உயர்த்தப்படுவதற்கான தெரிவுக் குழுவின் பரிந்துரையைப்  பரிசீலனை செய்த பேரவை அதற்கான அங்கீகாரத்தையும்  வழங்கியுள்ளது.

You Might Also Like

செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

மகஜர் கையளிப்பு!

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

Anarkali May 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நாளை கடமைகளை பொறுப்பேற்கிறார் வடக்கு ஆளுநர் சாள்ஸ்!
Next Article நெடுந்தீவில் அநாதரவான நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

You Might Also Like

யாழ்ப்பாணம்

செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

June 29, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!

June 29, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மகஜர் கையளிப்பு!

June 27, 2025
யாழ்ப்பாணம்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

June 27, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?