யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கல்வியல் துறையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாருமான கலாநிதி ஆனந்தமயில் நித்திலவர்ணன் அவர்கள் கல்வியல் துறை பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியின் பழைய மாணவராகிய இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வியியலுடன் விஞ்ஞானாமானிப் பட்டத்தை முதலாவது அணியில் முதல் நிலை மாணவராக பெற்றுக் கொண்டவர்.
அதன் பின்னர் உதவி விரிவுரையாளராகவும், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஆசிரியராகவும் கடமையாற்றிய அதன் பின்னர் கல்வியல் துறையின் நிரந்தர விரிவுரையாளராக இணைந்து சிரேஷ்ட விரிவுரையாளராக உயர்வு பெற்று பேராசிரியராக நிமிர்ந்து உள்ளார்.
ஆய்வு மற்றும் அறிவு பரவலாக்கத்தில் திறனுடன் செயல்படும் பேராசிரியர் நித்திலவர்ணன் அவர்கள் பல்வேறு சமூக மட்ட மற்றும் தேசியமட்ட அமைப்புகளிலும் தன் பங்களிப்பை நல்கியவர்.
உயர் பட்டப்படிப்புகள் பீடத்தினால் நடத்தப்படும் கல்விமாணிக் கற்கைநெறியின் இணைப்பாளராகவும் கல்வி முதுமானி, கலாநிதி பட்டப்படிப்புக்களின் மேற்பார்வையாளராகவும் தன் பங்களிப்பை நல்கி வருகின்றவர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் முதுதத்துவமானி மற்றும் கலாநிதி பட்டங்களை நிறைவு செய்த இவர் நிலைபேண் கல்வி, கல்வி உளவியல், கல்வி ஆய்வியல், மற்றும் கல்வியின் சமகாலப் போக்குகளில் பல்வேறு நூல்களையும் படைத்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணி நிலைகளிலும் தன் பங்களிப்பை நல்கிய இவர் மிக இளைய வயதில் பேராசிரியர் ஆகிய யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கல்வியில் துறையின் கல்வியியலாளர் எனும் தகமையைப் பெற்றுக் கொள்கின்றார்.