யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ஜனாதிபதி அடிக்கல் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான கட்டுமானப்பணியின் ஆரம்பமாக மண்டைதீவு பகுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களால் இன்று (செப். 01) அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன் பின்னர் அந்த இடத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்  

இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள்அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர்இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், அமைச்சின் செயலாளர்கள், பிரதம செயலாளர் உள்ளிட்டதிணைக்களத் தலைவர்கள், மாணவர்கள் எனப் பலர்  கலந்துகொண்டனர்.

Share this Article