யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், ஜனாதிபதியின் அனுமதி மற்றும் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் பொறுப்பேற்றுள்ளார் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி நியமனத்தை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான போராசிரியர் ஏ. எச்.எம்.எச். அபயரத்ன அங்கீகரித்து, அதற்கான அறிவிப்பை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பியுள்ளதாக மாவட்ட செயலக ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கடற்றொழில் அமைச்சரின் புதிய பொறுப்பு தொடர்பான அறிவிப்பு, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நியமனம் குறித்து மாவட்ட செயலக ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.