யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் மற்றும் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக்ஸ் வோல்ஸ் ஆகியோருக்கிடையே இன்று (பெப்ரவரி 13) விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
மாநகரத்துக்கான பாதாள சாக்கடைத்திட்டம் ஒன்று முறையாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாக 3 ஆண்டுகளுக்கு முன்னர் டொரொன்டோ மாநகர முதல்வருடன் கலந்துரையாடப்பட்டது.
அதன்பின்னர் கொரோனா நிலைமை காரணமாக அதை நடைமுறைப்படுத்த முடியாது போனது. அந்த விடயத்தை மீள ஆராய்வதற்காக நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை கனடா டொரொன்டோ மாநகரத்தின் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என்று யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் ஏற்படுத்தப்படும் தடைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும், மக்களின் நிலைமைகள் தொடர்பிலும் தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் கனடா நாட்டின் தூதுரக அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பாகப் பரிசீலிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார்.