யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதி ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
உடுவிலைச் சேர்ந்த யோகராசா கஜன் (வயது-32) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சிறுநீரகச் செயலிழப்புக் காரணமாக இவர் கடந்த சில வாரங்களாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.