யாழ்ப்பாணத்தில் பெருமளவு கேரளா கஞ்சா மீட்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்றுப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு 10. 30 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சாமீட்கப்பட்டுள்ளது

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்முல்லைத்தீவு விசேட அதிரடிப் படையினரால்ஓர் விசேட சுற்றிவளைப்புசெம்பியன் பற்று தெற்கு பகுதி முழுவதும் மேற்கொள்ளபட்டது

இச் சுற்றி வளைப்பில் 8பொதிகளில் சுமார் 16 கிலோ கேரளா கஞ்சாமீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் தப்பி சென்றுள்ளார் மீட்கப்பட்ட கேரளாகஞ்சா மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார்மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article